கிரிக்கெட் என்பது இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இதை அனைத்து விதமான வயது வகையினரும் பார்த்து ரசிக்கின்றனர். இதனால் வீரர்கள் ரசிகர்களிடையே அதிகமாக போற்றப்படவும் செய்கின்றனர். பிசிசிஐ நிர்வாகம் தான் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியத்தை விட அதிக பணம் புழங்கும் வாரியம் ஆகும். இதனால் வீரர்களுக்கும் சம்பளங்கள் மற்ற நாடுகளில் உள்ள வீரர்களை விட அதிகம் ஆகும்.
இதற்கு இணையாக இந்திய வீரர்களும் தனது கடின உழைப்பை செலுத்தி வருகின்றனர். மேலும் வருடம் முழுவதும் நல்ல உடல்நிலையை தயார் நிலையில் வைத்துக்கொண்டும் உள்ளனர். 132 கோடி மக்கள் உள்ள நாட்டில் 11 வீரர்களில் இடம் பெறுவது எளிதானது அல்ல.
பிசிசிஐ இந்தமுறை வழக்கமாக இல்லாமல், வருடாந்திர ஒப்பந்தம் மூலமாக வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தது. மேலும் 3 விதமான போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கு அதிக சம்பளமும் வழங்க முடிவு செய்தது. வீரர்களையும் அவர்களின் பிரிவுகளையும் தற்போது பார்ப்போம்.
கிரேட் A+
1. விராத் கோலி

இந்திய ரசிகர்களால் மிகவும் போற்றப்படும் பின்பற்றப்படும் வீரர் விராத் கோலி என்றால் மிகையாகாது. இந்திய பேட்டிங் வரிசைக்கு முதுகெலும்பாக விளங்கி வருகிறார். தொடர்ந்து டெஸ்ட் ஒருநாள் போட்டி என அனைத்திலும் சதங்கள் விளாசி சாதனைமேல் சாதனையாக படைத்து வருகிறார். மேலும், அனைத்து விதமான போட்டிகளுக்கு கேப்டன் ஆகவும் விளங்குகிறார். இவர் தலைமையில் தன் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.
இவர் எந்தவித தயக்கமும் இன்றி A+ கிரேட் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், வருடத்திற்கு 7 கோடி சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்