2. ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், பின்பு மீண்டு வந்து இந்திய அணிக்கு நிதானமாகவும், அதிரடி துவக்கத்தையும் கொடுத்துள்ளார். 2013 ம் ஆண்டுக்கு பிறகு, ஒருநாள் போட்டியில் 4616 ரன்கள் குவித்துள்ளார். இது துவக்க வீரர்களில் அதிகபட்சம் ஆகும். மேலும், 2013ம் ஆண்டுக்கு பிறகு அதிக ரன்கள் குவித்தவர்களில் விராத் கோலி க்கு அடுத்தபடியாக உள்ளார்.
மேலும், டி20 போட்டிகளில் எதிரணியை துவம்சம் செய்யும் ஆட்டக்காரர்களில் இவரும் ஒருவர். இதனால், A+ கிரேட் வீரர்களில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு வருடாந்திர ஒப்பந்தமாக 7 கோடி வழங்குகிறது பிசிசிஐ நிர்வாகம்.