இந்த ஒரு வீரரைப் போல இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் என்னை பயமுறுத்த முடியாது என்று ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சவால்.

ஐசிசி நம்பர் ஒன் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நெய்ல்வாக்னர் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான போட்டியில். நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிகச் சிறந்த முறையில் பந்துவீசி 3 டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன் மூலம் அந்த தொடருக்கான அதிகமான விக்கெட்களை
எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். இவரின் அபாரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறியது இவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சற்று தடுமாறினார்.
இவருடைய ஷார்ட் பிட்ச் பந்துவீச்சும் பீல்டிங்கும் மிக நேர்த்தியாக உள்ளது. இவர் மிகவும் பொறுமையாக பந்துவீசி துல்லியமாக விக்கெட்களை வீழ்த்தினார் .
மேலும் மிக அதிகமான சாட் பிச் பந்துகளில் மூலமாக விக்கெட்களை வீழ்த்தினார் இவரின் இந்த அபாரமான பந்து வீச்சால் சர்வதேச அளவில் சிறந்த பந்துவீச்சாளர்கல் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்று நெய்ல் வாக்னர் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
இந்நிலையில் வருகிற நவம்பர் 27 அன்று அடிலைடில் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இதில் நெய்ல் வாக்னர் அளவுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் பும்ரா போன்ற வீரர்கள் இருந்தும் ஸ்மித் இவ்வாரு கூரியது இந்திய அணி வீரர்களை வம்பிலுப்பது போல் உள்ளது என்ரு கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.