2003ல் சச்சினை அவுட்டாக்கியதற்காக மக்கள் என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார் 1

தென்ஆப்பிரிக்காவில் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கிய என்னை, இந்தியாவை சேர்ந்தவர்கள் இன்னும் மன்னிக்கவில்லை என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.

சச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்

 

தென்ஆப்பிரிக்காவில் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கிய என்னை, இந்தியாவை சேர்ந்தவர்கள் இன்னும் மன்னிக்கவில்லை என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.

2003ல் சச்சினை அவுட்டாக்கியதற்காக மக்கள் என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார் 2
Australian fast bowler Glenn McGrath and Indian maestro Sachin Tendulkar had a plethora of epic battles throughout their storied careers. While McGrath was an epitome of discipline, immaculate line-and-lengths and relentlessness, Tendulkar was a perfect example of the product when talent meets temperament.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசித்து பார்ப்பார்கள். சச்சின், மெக்ராத் காலத்தில் மெக்ராத் பந்து வீச்சை சச்சின் எப்படி எதிர்கொள்கிறார், சச்சினை மெக்ராத் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பதே போட்டியாக திகழும்.

பெரும்பாலான நேரத்தில் மெக்ராத் பந்து வீச்சை சச்சின் தெண்டுல்கர் துவம்சம் செய்திருக்கிறார். அதேபோல் சச்சினையும் மெக்ராத் கட்டுபடித்தியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை நான்கு ரன்கள் எடுத்த நிலையில் மெக்ராத் வீழ்த்தியிருப்பார்.

2003ல் சச்சினை அவுட்டாக்கியதற்காக மக்கள் என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார் 3
Glenn McGrath recalled the incident during the chat stating the reason why he appealed despite the ball hitting Sachin Tendulkar’s shoulder.

இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘எனக்கும் சச்சின் தெண்டுல்கருக்கும் இடையில் சிறப்பாக கிரிக்கெட் சண்டை நடைபெற்றுள்ளது. தற்போது நான் இந்தியாவில் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறேன். இந்தியா எனக்கு 2-வது சொந்த வீடு மாதிரி. இங்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். ஆனால், 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கியதற்காக இங்குள்ளவர்கள் நாங்கள் இன்னும் உங்களை மன்னிக்கவில்லை என்கிறார்கள்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *