இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை முதல் கட்டமாக நடத்தப்பட்டது இதன் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்டது நிலையில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இதற்காக வீரர்கள் இந்திய வந்தடைந்துவிட்டனர். அதேபோல் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்த வீரர்கள் தற்போது தனிமைப்படுத்துதலில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
வீரர்களுக்கு மொத்தம் மூன்று கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. இவை அனைத்தும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு முன்னர் முடிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் வீரர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவர் எனவும் அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் முதல்கட்ட கொரோனா பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் தோற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. வீரர்கள் அனைவரும் தொடர்ந்து விதிமுறைகளின்படி கண்காணிப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
“மூன்றுவித பரிசோதனைகளிலும் வீரர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்கப்படும். அதுவரை தனித்தனியாக தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுவர். தனி அறையில் தனிமையில் இருந்தால் மனதளவில் வீரர்கள் பாதிப்படைவர் என்பதற்காக இந்த முறை வீரர்களின் விருப்பப்படி அவர்களது குடும்பத்தினருடன் தங்கி கொள்ளலாம் என சலுகைகள் அளிக்கப்பட்டது.” என்றார்.
இதனடிப்படையில் ரகானே, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளை தங்கும் அறைக்கு அழைத்து வந்துள்ளனர்.
” இந்த செயல்பாடு வீரர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தொடர்ந்து தனிமையில் இருக்கிறோம் என உணர மாட்டார்கள்.” என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.