பிசிசிஐ நிர்வாகம் யோ-யோ உடற்தகுதி பரிசோதனையை இந்திய வீரர்களுக்கு கட்டாயம் ஆக்கியுள்ளது. அடுத்து வர இருக்கும் ஆப்கானிஸ்தான போட்டியில் பங்கு பெற வீரர்களுக்கு பெங்களூருவில் தற்போது பரிசோதனை நடந்து வருகிறது.
இந்த பரிசோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வீரசர்களுக்கு இந்திய அணியில் இடம் பிடிக்கமுடியும். யோ-யோ பரிசோதனையில் தேர்ச்சி பெற தவறினால் இந்திய அணியில் இருந்து வெளியேற்ற படுவார்.
இங்கிலாந்து அயர்லாந்து செல்லும் வீரர்களுக்கும் இந்த பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ப்லேயிங் லெவேனில் இடம் பெறவும் இந்த பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும்.
கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது சுரேஷ் ரெய்னா, உத்தப்பா இருவரும் இந்த பரிசோதனையில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டு வேறு இவர்கள் இருவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த பரிசோதனை முதல் முதலில் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபொழுது அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு, அவர் பணிக்காலம் முடியும் பொழுதே இந்த பரிசோதனையும் நிறுத்தப்பட்டது.
தற்போது, பிசிசிஐ நிர்வாகம் வீரர்களின் உடர்த்தகுதியை கருத்தில் கொண்டு இந்த பரிசோதனையை மீண்டும் கையில் எடுத்து கட்டாயம் ஆக்கியிருக்கிறது.
யோ-யோ பயிற்சியில் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 16.1 மதிப்பெண்ணை கடந்திருக்க வெண்டும். இல்லையெனில், அணியில் இடம் பெறுவது மிகவும் கடினம்.
வரும் ஜூன் 14 ம் தேதி, இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோத இருக்கிறது. வீரர்கள் இதன் அடிப்படையிலேயே அணியில் சேர்க்கப்படுவர்.