2021 கான ஐபிஎல் போட்டி மே மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தனது வீரர்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது, மேலும் தனக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் பெற்றுக் கொள்ள திட்டம் தீட்டிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் வருகிற பிப்ரவரி 18 சென்னையில் நடக்க உள்ளது.
ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்று தெரிந்துவிடும் கடந்த ஆண்டு மொசமாக விளையாண்ட மூன்று நட்சத்திர வீரரான 2021 ஐபிஎல் போட்டியில் எந்த ஒரு அணியிலும் தேர்வு செய்யாமல் போகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

1.ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்,எதிர்பாராதவிதமாக 2020க்கான ஐபிஎல் போட்டியில் இவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இவர் 14 போட்டிகளில் பங்கேற்று 111 ரன்கள் மட்டுமே எடுத்தார் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 131.22 மற்றும் ஆவரேஜ் 25 .91
லிமிடெட் ஓவர் போட்டிகளில் அதிரடி நாயகனாக திகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித் 2021 காண ஐபிஎல் போட்டியில் எந்த அணியிலும் தேர்வாக மாற்றார் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
2.ஜேம்ஸ் நீசம்.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜேம்ஸ் நீசம் கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார்.
ஆல்ரவுண்டரான இவர் 5 போட்டிகளில் பங்கெடுத்து 19 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவரின் இந்த மோசமான வெளிப்பாட்டால் அந்த பஞ்சாப் அணி இவரை நீக்கி விட்டது.. 2021 ஐபிஎல் போட்டியில்இவர் எந்த அணியிலும் தேர்வாக மாட்டார் என்று பலரும் தனது கருத்தை தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றன.
3.கேதர் ஜாதவ்
இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேதர் ஜாதவ் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. 2020 ஐபிஎல் போட்டியில் இவர் தனது மோசமான ஃபார்மால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2018இலொ 7 கோடிக்கும் அதிகமான ஏலத்தில் எடுக்கப்பட்ட கேதர் ஜாதவ் 2020 ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக 8 போட்டியில் பங்கேற்று 62 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் இவர் எந்த அணியிலும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்று பல கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்