ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணியே பலம் வாய்ந்தது; வி.வி.எஸ் லக்ஷமன் சொல்கிறார்
தற்போது உள்ள ஆஸ்திரேலிய அணியை விட இந்திய கிரிக்கெட் அணி கூடுதல் பலம் கொண்டது என முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள்மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 11 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தநிலையில் இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்முதல் போட்டி டிசம்பர் 6ம் தேதி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் துவங்கஉள்ளது.
சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் தொடருக்கு ஒட்டுமொத்தகிரிக்கெட் உலகமும் காத்திருப்பதால், கிரிக்கெட் விமர்ச்சகர்கள், முன்னாள் வீரர்கள் எனபலரும் இந்த தொடர் குறித்தான தங்களது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மண், ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி பல மடங்கு சிறந்த அணி என்று தெரிவித்துள்ளார்.
The pace battery in action at the nets ahead of the 1st Test against Australia.#AUSvIND pic.twitter.com/fNs7NRSOQJ
— BCCI (@BCCI) December 4, 2018
இது குறித்து வி.வி.எஸ் லக்ஷ்மன் கூறியதாவது, “இரு அணிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயம் இந்திய அணியே இந்த தொடரை வெல்லும். ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி பல மடங்கு சிறந்த அணியாக உள்ளது.அதே வேளையில் தங்கள் சொந்த மண்ணில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட கூடாது. கோஹ்லியும் மற்ற இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினால் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி அசால்டாக வெல்லும். தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்தில் செய்த தவறுகளை இந்திய அணி ஆஸ்திரேலியாவிலும் செய்து விட கூடாது” என்று தெரிவித்துள்ளார்.