ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளில் மட்டும் இல்லாமல் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இது வரை இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் பல இந்திய வீரர்கள் விளையாடி உள்ளார்கள். அதில் பல வீரர்கள் பல இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அதில் சில வீரர்கள் மட்டுமே இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்திருக்கிறார்கள். அந்த வகையில், ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியில் சில நட்சத்திர வீரர்கள் உள்ளார்கள். இந்த அணியுடன் எந்த அணி மோதினாலும் வெற்றி பெற வாய்ப்பில்லை. ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த இந்திய அணியை இப்பொழுது காண்போம்:
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்டின் கடவுள், சிறந்த தொடக்க வீரர் யார் என்றால் சச்சின் டெண்டுல்கர் என்று அனைவருக்குமே தெரியும். 28 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 452 இன்னிங்சில் 18426 அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 200* ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 49 சதம் அடித்திருக்கிறார் சச்சின். பல முறை இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர் தான். தொடக்கத்தில் பொறுமையாக விளையாடும் இவர், சிறிது நேரம் கழித்து அடித்து விளையாட தொடங்கி விடுவார். இதனால், இந்திய அணிக்கு தொடக்கம் தர இவர் தான் சரியான வீரர்.