ஜாஹீர் கான்
முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாஹிர் கான் ஆரம்பத்திலேயே தொடக்கவீரர்களை வெளியேற்றுவதில் வல்லவர். அவரது ஸ்விங் பந்து வீச்சுக்கே எதிரணி வீரர்கள் திணறுவார்கள். வேகப்பந்து, ஸ்விங் பந்து, யார்க்கர் என அனைத்து விதமான பந்துகளையும் வீசி இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளராக இருந்திருக்கிறார் ஜாஹீர் கான். 200 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாஹீர் கான், 282 விக்கெட் எடுத்திருக்கிறார். இதனால், இந்த அணியில் இடம் பெற இவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது.