விரேந்தர் சேவாக்
இந்திய அணியின் முன்னாள் தொடக்கவீரர் விரேந்தர் சேவாக், இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஆச்சரியம் அல்ல. ஏனென்றால், இந்திய அணிக்காக பல முறை நல்ல ஓப்பனிங் செய்த வீரர்களில் முக்கியமானவர் விரேந்தர் சேவாக் தான். வந்தவுடன் யார் எவரென்று பார்க்காமல், இந்திய அணியின் ரன்னை உயர்த்த தொடக்கத்தில் இருந்தே அடித்து விளையாடுவார். இதனால், அணியின் ஸ்கோர் மளமளவென அதிகரிக்கும். 245 ஒருநாள் இன்னிங்ஸ் விளையாடியுள்ள சேவாக் 8273 ரன் அடித்து, அதில் 15 சதங்கள் உட்பட, அதிகபட்சமாக 219 ரன் அடித்திருக்கிறார். இதனால், சச்சின் டெண்டுல்கர் பொறுமையாக விளையாட, சேவாக் அடித்து விளையாட, இந்த ஜோடி தான் சிறந்தது.