விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த அணியில் இடம் பெறுவது ஆச்சரியம் இல்லை. இந்த அணியில் அவர் இடம் பெறவில்லை என்றால் தான் ஆச்சரியம். அவருடைய சாதனைகளே போதும், இந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்க. இந்திய அணிக்காக பல போட்டிகளில் தனி வீரராய் வெற்றி வாங்கி கொடுத்துள்ளார். பல நட்சத்திர வீரர்களை விட குறைவான போட்டிகளே விளையாடி இருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் தனது சராசரி 50க்கும் மேல் வைத்துள்ளார். இந்த இளம் வயதிலேயே பல சாதனைகளை புரிந்துள்ளதால், இந்த இடத்திற்கு இவர் தான் சரியான வீரர்.