அஜித் அகர்கர்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த பந்துவீச்சாளராக இருந்துள்ளார். ஒருநாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் போட்டி என எதுவாக இருந்தாலும், தொடக்கவீரர்களை சிரம படுத்தி அவர்களின் விக்கெட்டை எடுத்து விடுவார். அவர் வீசும் வேகம் மற்றும் செய்யும் ஸ்விங் பந்துக்கே பல விக்கெட்டுகள் விழுந்துள்ளது. பந்துவீச்சில் மட்டும் இல்லாமல், நேரத்திற்கு தகுந்தாற் போல் பொறுமையாகவும் அடித்து விளையாடவும் செய்வார் அஜித் அகர்கர். ஒருநாள் போட்டிகளில் 188 இன்னிங்ஸ் விளையாடியுள்ள அஜித் அகர்கர் 288 விக்கெட் எடுத்திருக்கிறார்.