புதன் கிழமை சந்திப்பு
நேற்று, புதன் கிழமை நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்க்கும் அதன் நிர்வாக அலுவளர்களுக்குமான கலந்தாய்வில் கலந்துறையாடப்பட்ட மிக முக்கியமான தலைபுகளில் ஒன்று தான் இந்திய கிரிக்கெட் அணியின் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் கனவு.
புதன் கிழமை COA எனப்படும் நிர்வாக கமிட்டிக்கும் BCCL இன் அலுவலக அலுவலர்களுக்கும் ஆன சந்திப்பின் போது ஒலிம்பிக்கில் இந்திய கிரிக்கெட் அணி பங்கு பெறுதல் என்பதை பொதுக்குழு கூடிதான் முடிவெடுக்க வேண்டும். மற்றூம், இது போன்ற சந்திப்பின் போது அதனைப்பற்றி தலைப்புகளில் பிரதிநிதிதுவப்படுத்தி பேச மட்டும் தான் முடியும் எனக் கூறினார் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டையானா எடுல்ஜி.
ஶ்ரீசாந்த் விவகாரம் :
நேற்று நடந்த சந்திப்பிற்குப் பிறகு நடந்த பதிரிக்கையாளர் சந்திப்பில் டையானா எடுல்ஜி கூறியதாவது, இந்திய கிரிக்கெட் அணி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவதைப் பற்றி இன்னும் முடிவு எட்டப்படவில்லை. நாங்கள் அதனை கலந்தாலோசித்த பிறகு பொதுக்குழுவின் முடிவில் அறிக்கை சமர்பித்து விட்டு விடுவோம். பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
எப்படி பார்த்தாலும் ஒலிம்பிக்கின் அட்டவணைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒத்துழைக்காது எனத் தெரிகிறது. ஏனெனில் கிரிக்கெட் நீண்ட நேரம் நடக்கக் கூடிய ஒரு விளையாட்டு. அதனை ஒலிம்பிக்கில் சேர்த்து குறுகிய கால கட்டத்திள் முடிப்பது சிறமமான காரியம்.
தேர்வுக்குழுவிற்கு சன்மானம் :
அதே சந்திப்பின் போது வேறொரு மகிழ்சிகரமான செய்தியும் தேர்வுக்குளுவிற்க்கு கிடைத்துள்ளது. அதாவது, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா 15 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை மற்றும் ஆண்கள் சாம்பியன்ஸ் ட்ராபில் இரு அணிகளுமே சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை சென்றதால், அவர்களை தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கு இந்த 15 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல முன்னால் கேப்டன் அசாருதின் பிக்சிங் வழக்கை கடந்த 2012 ஆன் ஆண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த்தால் அவருக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையையும் அவருக்கு அளிப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் தடையை நீக்க கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிடது. அதற்க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இன்னும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அது குறித்து அந்த கலந்தாய்வில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.