இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது ஓருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (21ம் தேதி) நடைபெற உள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பதால் இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சி என இரண்டிலும் இந்திய அணி சொதப்பியதால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தலா ஒரு மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.
துவக்க வீரராக கே.எல் ராகுலுடன் களமிறங்கிய ஷிகர் தவான், முதல் போட்டியில் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்துவிட்டதால் இரண்டாவது போட்டியிலும் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.
மிடில் ஆர்டரில் விராட் கோலி வழக்கம் போல் இடம்பெறுவார். அதே வேளையில் ஸ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவிற்கு இடம் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடந்த போட்டியில் சொதப்பிய புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இடம்பெறுவார்கள் என தெரிகிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
கே.எல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திர அஸ்வின், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், யுஸ்வேந்திர சாஹல்.