ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் போராடி தோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் படுதோல்வியையும், மூன்றாவது போட்டியில் வெற்றியும் பெற்றது. இதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நான்காவது போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 1-3 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.
இங்கிலாந்து அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஷிகர் தவான்;
இந்திய அணியின் துவக்க வீரராக தொடர்ந்து சொதப்பி வரும் ஷிகர் தவான் அடுத்த போட்டியிலாவது தனது பங்களிப்பை சரியாக செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
