இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை; ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை; ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

இந்தநிலையில், டி.20 தொடர் நிறைவடைந்த பிறகு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் நடராஜன், பிரசீத் கிருஷ்ணா, சிராஜ், சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே போல் ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், க்ரூணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை; ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

அதே வேளையில், காயம் காரணமாக டெஸ்ட் தொடர் மற்றும் டி.20 தொடரில் விளையாடாத ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஒருநாள் தொடருக்கான அணியிலும் இடம் கிடைக்கவில்லை. ஜஸ்ப்ரிட் பும்ராஹ் தனது சொந்த காரணங்களுக்காக விலகியதால் ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. புவனேஷ்வர் குமார் ஒருநாள் தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், க்ரூணல் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *