நடராஜன், திலக் வர்மாவிற்கு இடம் இல்லை... சுப்மன் கில் கேப்டன்; ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

நடராஜன், திலக் வர்மாவிற்கு இடம் இல்லை… சுப்மன் கில் கேப்டன்; ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஜிம்பாப்வே அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் பங்கேற்க உள்ளது.

ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுப்மன் கில் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேட்ஸ்மேன்களாக ருத்துராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், அபிசேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ரியான் பிராக் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன திலக் வர்மாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

அதே போன்று பந்துவீச்சாளர்கள் வரிசையில் அபிசேக் சர்மா, வாசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், துசார் தேஸ்பாண்டே, முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு இடம் கிடைத்திருந்தாலும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்ட நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஜிம்பாப்வே அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணி; 

சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், அபிசேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ரியான் பிராக், வாசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான், கலீல் அஹமத், துசார் தேஸ்பாண்டே.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *