டக்குனு இந்தியாவ முடிச்சு கட்டிட்டோம்.. கெத்தாக ஜெயிச்சுட்டு நிக்கிறோம்னா அதுக்கு இவர்தான் காரணம் - கர்வத்துடன் பேசிய ஸ்டீவ் ஸ்மித்! 1

கிரிக்கெட்டில் ஏதாவது ஒருநாள் தொட்டது எல்லாம் நடக்கும் அல்லவா! அந்த ஒருநாள் எங்களுக்கு இன்று தான். நாங்கள் செய்தது அனைத்தும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது என்று கர்வத்துடன் பேசியிருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று, முதலில் பவுலிங் செய்தது.

முதல் ஒருநாள் போட்டியை போலவே இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒருமுறை இடதுகை வேகப்பந்து வீச்சாளருக்கு தடுமாறினார். சுப்மன் கில்(0), ரோகித் சர்மா(13), சூரியகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல்(9) ஆகியோர் மிட்ச்சல் ஸ்டார்க்கிடம் அடுத்தடுத்த சில ஓவரில் ஆட்டம் இழந்தனர்.

 

டக்குனு இந்தியாவ முடிச்சு கட்டிட்டோம்.. கெத்தாக ஜெயிச்சுட்டு நிக்கிறோம்னா அதுக்கு இவர்தான் காரணம் - கர்வத்துடன் பேசிய ஸ்டீவ் ஸ்மித்! 2

ஹர்திக் பாண்டியாவும்(1 ரன்னில்) உள்ளே வந்த வேகத்தில் வெளியேற, 10 ஓவர்ககுக்குள் 5 விக்கெடுகளை இழந்து படுமோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. நன்றாக ஆடிவந்த விராட் கோலியும் (31 ரன்கள்) புது பவுலரிடம் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் அவுட்டானார். அக்சர் பட்டேல்(29*) இறுதிவரை போராடியது ஆட்டமிழக்காமல் இருந்தார்.  26 ஓவர்கள் மட்டுமே பிடித்து 117 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. மிட்ச்சல் ஸ்டார்க் 5 விக்கெட்கள், சீன் அபாட் 3 விக்கெட்டுகள், நாதன் எல்லீஸ் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர்.

 

டக்குனு இந்தியாவ முடிச்சு கட்டிட்டோம்.. கெத்தாக ஜெயிச்சுட்டு நிக்கிறோம்னா அதுக்கு இவர்தான் காரணம் - கர்வத்துடன் பேசிய ஸ்டீவ் ஸ்மித்! 3

எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், மிச்சல் மார்ஷ் இருவரும் களமிறங்கி முதல் ஓவரில் இருந்தே இந்திய பவுலர்களை திணறடித்தனர். ஒவ்வொரு ஓவரிலும் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி, பத்து ஓவர்களில் 112 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. 11 ஓவர்களில் 121 ரன்கள் அடித்து ஆட்டத்தையே முடித்தது.

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றியை பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிஸ் ஹெட் 51 ரன்கள், மிட்ச்சல் மார்ஷ் 66 ரன்கள் அடித்திருந்தனர்.

போட்டி முடிந்தபின் வெற்றிக்களிப்பில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பெற்றியளித்தார். அப்போது ஸ்மித் பேசியதாவது:

“போட்டி சீக்கிரம் முடிந்து விட்டது. 37 ஓவர்கள் மட்டுமே மொத்தமாக வீசப்பட்டிருக்கிறது. அடிக்கடி இது போன்ற போட்டிகளை நம்மால் பார்க்க முடியாது. இதற்கு முக்கிய காரணம், மிட்ச்சல் ஸ்டார்க் தான். புதிய பந்தில் இந்திய வீரர்களை நொறுக்கிவிட்டார். இது எங்களுக்கு சிறந்த ஆரம்பமாக அமைந்தது. முதலில் இந்த விக்கெட் எப்படி இருக்கப் போகிறது, எவ்வளவு டோட்டல் வைத்தால் அடிக்க முடியும் என்று எதைப்பற்றிய யோசனையும் இல்லாமல், தெளிவான திட்டத்துடன் களமிறங்கி அதை வெளிப்படுத்தினோம். இந்தியாவை பிரஷரில் வைத்தால் போதும் என்று மட்டுமே யோசித்தோம். அது நடந்து விட்டது. கிரிக்கெட்டில் ஏதாவது ஒருநாள் நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும். அப்படிப்பட்ட ஒருநாள் தான் எங்களுக்கு இன்று.

பேட்டிங்கில் டிராவிஸ் மற்றும் மார்ஷ் இருவரும் மிகச்சிறப்பாக துவங்கினர். அதை அப்படியே முழுவதுமாக எடுத்துச் சென்றனர். முதல் போட்டியில் அத்தகைய தோல்விக்கு பிறகு மீண்டும் பவுன்ஸ் செய்து இருக்கிறோம்.” என்று ஸ்மித் பேசினார்.

டக்குனு இந்தியாவ முடிச்சு கட்டிட்டோம்.. கெத்தாக ஜெயிச்சுட்டு நிக்கிறோம்னா அதுக்கு இவர்தான் காரணம் - கர்வத்துடன் பேசிய ஸ்டீவ் ஸ்மித்! 4

அபாரமான கேட்ச் பற்றி கேட்கப்பட்டதற்கு, “நூற்றாண்டின் மிகச்சிறந்த கேட்ச்சா என்று எனக்கு தெரியாது. அதைப் பிடித்தது நன்றாகவே இருந்தது. அதிர்ஷ்டவசமாக, அதைப் பிடித்து விட்டேன். ஏனெனில் அது பெரிய விக்கெட். ஹர்திக் பாண்டியா நம்ப முடியாத அளவிற்கு சிறந்த பிளேயர். ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம்.” என்றார் ஸ்மித்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *