கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் பயிற்சியின் போது பவுன்சர் பந்து கழுத்து பகுதியை தீவிரமாக பதம் பார்த்ததால் காயம் காரணமாக மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், வரும் போட்டிகளில் அவரால் ஆட முடியாது என தெரியவந்துள்ளது.

Photo by: Prashant Bhoot /SPORTZPICS for BCCI
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆண்ரே ரஸ்ஸல் வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போடப்பட்ட பவுன்சர் பந்தை கணிக்காமல் ஆட முயற்சித்தபோது அவரின் கழுத்தை தீவிரமாக பதம் பார்த்தது, அப்போது அணியின் பிசியோதெரபி மருத்துவர் உடனடியாக விரைந்து முதலுதவி கொடுத்துவிட்டு, மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க அழைத்து செல்லப்பட்டார்.
ஸ்கேன் அறிக்கை வந்தபிறகே முழுமையான தகவல்களை கூற இயலும். மேலும், அடுத்த போட்டியில் இவர் ஆடுவாரா என்பதும் அறிக்கை பார்த்த பிறகே முடிவு செய்ய முடியும் என கூறியுள்ளார்.

Photo by: Ron Gaunt /SPORTZPICS for BCCI
ஆண்ட்ரே ரஸ்ஸல், இதுவரை கொல்கத்தா அணிக்காக சிறப்பாக ஆடியுள்ளார். நடுத்தர வரிசையில் நம்பிக்கை அளிக்கும் ஒரே வீரராக திகழ்ந்து வந்தார்.
இவர் ஆடிய 7 போட்டிகளில் 312 ரன்கள் குவித்தார். குறிப்பாக, ஸ்ட்ரைக் ரேட் 214 என்ற வகையில் ஆடியுள்ளார்.
கடந்த முறை கொல்கத்தா அணி பெங்களூரு அணியை சந்தித்த போது, 206 என்ற இமாலய இலக்கை எட்ட ரஸ்ஸல் உதவினார். அந்த போட்டியில், 13 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.