என்ன தம்பி இதெல்லாம்..? க்ரூணல் பாண்டியாவை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய அதிகாரிகள் !! 1

துபாயில் இருந்து இந்தியா திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர் க்ரூணல் பாண்டியாவை மும்பை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திடீரென தடுத்து நிறுத்தி சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் 13வது சீசன் ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது. கொரோனாவில் ஆரம்பித்து ரசிகர்கள் இல்லாத மைதானங்கள் வரை பல்வேறு பிரச்சனைகளையும், சிக்கல்களையும் கடந்து நடைபெற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியே மீண்டும் கோப்பையை வென்றது.

என்ன தம்பி இதெல்லாம்..? க்ரூணல் பாண்டியாவை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய அதிகாரிகள் !! 2

ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் துபாயில் இருந்து நேராக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்ட நிலையில், மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் நாடு திரும்பி வருகின்றனர்.

அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான க்ரூணல் பாண்டியா துபாயிலிருந்து மும்பை திரும்பிய நிலையில், மும்பை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகளால் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டார்.

அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களை அவர் வைத்திருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ன தம்பி இதெல்லாம்..? க்ரூணல் பாண்டியாவை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய அதிகாரிகள் !! 3

க்ரூணல் பாண்டியா வைத்திருந்த தங்க நகைகள், மற்ற பொருட்களின் விலை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. குறிப்பாக க்ரூணல் பாண்டியா கையில் கட்டியிருந்த வாட்ச் தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணமாக பார்க்கப்படுகிறது, பல லட்சம் மதிப்புள்ள இந்த வாட்சை அணிந்திருக்கும் புகைப்படத்தை க்ரூணல் பாண்டியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், இதனை அடிப்படையாக வைத்தே வருவாய் புலனாய்வு அதிகாரிகள் க்ரூணல் பாண்டியாவை சோதனை செய்யும் முடிவை எடுத்திருப்பார்கள் என கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *