கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் தொழிலும்

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நட்சத்திர வீரர்கள் தான், அவர்களை சுற்றி பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியும். அவர்களில் பல வீரர்கள் கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பு பல கடின பாதைகளை கடந்து வந்தவர்கள். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு அவர்கள் என்ன தொழில் செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்ப்போம்.

ஜோ டேவிஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஜோ டேவிஸ், எட்டு வருடமாக காவலராக பணியாற்றினார். கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் காவலராக பணியாற்றினார். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டில் விளையாட தொடங்கினார்.

தீபக் சுடசமா

முன்னாள் கிரிக்கெட் வீர் தீபக் சுடசமா , கென்யா கிரிக்கெட் அணிக்காக தொடக்கவீரராக களமிறங்கியவர். கிரிக்கெட் விளையாடுவதற்கு முன் தனது நாட்டிற்காக டேபிள் டென்னிஸ் விளையாடி உள்ளார் தீபக் சுடசமா. கென்யா அணிக்காக இரண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையில் விளையாடி இருக்கிறார் தீபக் சுடசமா. 1982இல் இந்தியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் வீரராக விளையாடி இருக்கிறார்.

இயான் சாப்பெல்

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் இயான் சாப்பெலும் ஒருவர் என்று நாம் அனைவர்க்கும் தெரியும். 1964 மற்றும் 1966ஆம் ஆண்டு சிறந்த வீரராக இருந்திருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தேர்வாகுவதற்கு முன்பு, கூடைப்பந்து வீரராக இருந்தார் இயான் சாப்பெல்.

டுவைன் லெவராக்

2007 உலகக்கோப்பையில் பெர்முடா அணிக்காக விளையாடியவர் தான் டுவைன் லெவராக். தனது மிக பெரிய உடம்பிற்கும், 2007 உலகக்கோப்பையில் இந்திய அணியுடன் விளையாடும் போது உத்தப்பாவின் கேட்சை ஸ்லிப் பகுதியில் இருந்து பிடித்து பிரபலம் ஆகிவிட்டார். பெர்முடாவில் போலீசாக வேலை பார்த்து கொண்டிருந்தார். ஆனால், 2007 உலகக்கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் தோற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல், வெளியே சென்றது.

நாதன் லியோன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஒரு முக்கிய வீரராக மாறிவிட்டார் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன். அவர் அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தகுதி பெற்றார்.

ஷேன் பாண்ட்

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு நட்சத்திர பந்து வீச்சாளராக இருந்து, பல பேட்ஸ்மேன்களை சின்னாபின்னம் ஆகியவர் ஷேன் பாண்ட். அவர் கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன் போலீசாக வேலை பார்த்தார். பிறகு நியூஸிலாந்து அணிக்கு பயிற்சியாளராக ஆனார்.

பிராட் ஹாட்ஜ்

ஆஸ்திரேலிய அணிக்காக பல நல்ல விளையாடி இருக்கும் பிராட் ஹாட்ஜ், அவரது திறமையை மேலும் நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு அவர் ஊரில் இருந்த ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்தார்.

முகமது தாஹிர்

திணறி கொண்ட அரேபிய அணியை ஐசிசி உலகக்கோப்பை 2015இல் தகுதி பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக முகமது தாஹிர் தான். அரேபியா அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். கிரிக்கெட் விளையாடுவதற்கு முன் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார் முகமது தாஹிர்.

ஏபி டி வில்லியர்ஸ்

கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவர் தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் என்று நாம் அனைவருக்குமே தெரியும். கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல், பல விதமான போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். பாட்மிண்டன், ஹாக்கி, கால்பந்து, ரக்பி என பல போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதற்கு பிறகு கிரிக்கெட்டில் சாதனைகள் புரிய வந்துள்ளார்.

எம்.எஸ். தோனி

பல தடைகளை தாண்டி இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்த மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்காக பல கோப்பைகளை வாங்கி தந்துள்ளார். 2001 முதல் 2003 வரை டிக்கெட் கலெக்டராக வேலை செய்த தோனி, 2004இல் தான் இந்திய அணிக்கு வந்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.