இந்த இரண்டு இந்திய வீரர்களை பார்த்து கத்துக்கங்கடா; இன்சமாம் உல் ஹக் அட்வைஸ்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றி பெற இந்திய கிரிக்கெட் அணியை முன்னாள் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று. நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி-20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதும் நான்காவது டி-20 போட்டி நாளை வெலிங்டனில் நடக்கிறது.

இந்நிலையில் போட்டியின் கடைசி ஓவரை இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகம்மது ஷமி அசத்தலாக வீசி போட்டியை டை செய்த கைகொடுத்தார். இதையடுத்து இந்திய அணிக்கு துணைக்கேப்டன் இரண்டு இமாலய சிக்சர்கள் பறக்கவிட இந்திய அணி நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. இதையடுத்து உலகம் முழுதும் இருந்து இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கூட இந்திய வீரர்களை பாராட்டி வருகின்றனர். அந்தவரிசையில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் இந்திய அணியை பாராட்டியதுடன், இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிக்கு காரணமான வீரர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்சமாம் கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு மிகப்பெரிய வீரர்கள் உள்ளனர். ஒருவர் விராட் கோலி இன்னொருவர் ரோஹித் ஷர்மா. ஆனால் அந்நிய மண்ணில் இரண்டு சிறந்த வீரர்களால் மட்டும் வெற்றி கிடைக்காது. அதில் தான் கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் பங்கு வெளிப்படுகிறது. அவர்கள் இந்திய அணியை வேற லெவலுக்கு எடுத்துச் செல்கின்றனர்.