ஐபிஎல் தொடரெல்லாம் வேண்டாம்.. இந்த தொடரை கவனிங்க; ஐசிசி-க்கு கோரிக்கை விடுக்கும் பாக்., வாரியம்!
உலகக்கோப்பை தொடரை நடத்த கவனம் செலுத்துங்கள்; மற்ற உள்நாட்டின் டி20 தொடர்களை பின்பு பார்க்கலாம் என ஐசிசி க்கு அழுத்தம் கொடுத்து வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் மூன்று மாத காலமாக நடைபெறவில்லை. இதனால் வீரர்களும் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். ஊரடங்கிற்கு பிறகு முதல்முறையாக இங்கிலாந்து மற்றும் விண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை மாதம் 8ஆம் தேதி நடக்கிறது.
இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரும் நடக்கவிருக்கிறது. இதற்காக, பாக்கிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றுவிட்டது.
இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கொண்டே இருக்கிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் நோய் தொற்றிற்கு உள்ளாகின்றனர். இதனால், இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை கிரிக்கெட் தொடர்கள் மற்றும் பயிற்சிகள் துவங்குவது சாத்தியமற்றது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதேபோல, ஆஸ்திரேலியாவில் அக்டொபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை டி20 தொடர் நடக்கவிருக்கிறது. பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் வருவதால், கொரோனா பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் குறிப்பிட்ட தேதிகளில் தொடரை நடத்துவது சாத்தியமற்றது என ஐசிசி தரப்பிடம் முறையிட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், ஐபிஎல் தொடரை சூழ்நிலைக்கு ஏற்ப ஒரே மைதானத்தில் வைத்து முடித்துவிட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்க்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பேசியுள்ளார் பாக்., அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான இன்சமாம் உல் ஹக்.

Pakistan included five uncapped players in the 16-man squad announced April 15 for their Tests against Ireland and England starting next month, with an eye on the World Cup next year. / AFP PHOTO / ARIF ALI (Photo credit should read ARIF ALI/AFP/Getty Images)
அவர் கூறுகையில், “உலகக்கோப்பை தொடர் நடக்கப்போவதில்லை. இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் நடக்கப்போவதில்லை. அந்த குறிப்பிட்ட காலத்தில் ஐபிஎல் தொடர் நடக்கும் என்கிற வதந்திகள் தொடர்ந்து வருகின்றன. இதற்க்கு ஐசிசி உரிய பதிலை அளிக்கவேண்டும்.
எனது கோரிக்கை யாதெனில், உள்நாட்டு பிரீமியர் லீக் டி20 தொடர்களை நடத்துவதை தவிர்க்கவேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களையும் தவிர்த்து, ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் அமர்ந்து எந்தெந்த நேரத்தில் நடத்திக்கொள்ளலாம் என்பதை முடிவு செய்யவேண்டும். அதேநேரம் குறிப்பிட்ட நேரத்தில் உலகக்கோப்பை தொடரை நடத்த கவனம் செலுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.