குஜராத்தில் நடக்கும் போட்டியில் பெங்களூருக்கு எதிராக டாஸை வென்று பந்து வீச தேர்ந்தெடுத்துள்ளது குஜராத் லயன்ஸ். இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் கடைசியில் உள்ளதால், இரண்டு அணியும் வெற்றி பெறவேண்டும் என முனைப்பில் உள்ளது.
டாஸின் போது:
சுரேஷ் ரெய்னா – நாங்கள் பந்து வீசப்போகிறோம். எங்களுக்கு சேஸ் செய்வது பிடிக்கும். ராய், முனாப் மற்றும் பிரவீன் ஆடவில்லை.
விராட் கோலி – இந்த பிட்ச் நன்றாக இருக்கிறது போல் தோன்றுகிறது. நாங்கள் நல்ல இலக்கை கொடுப்போம். இரண்டு அணியும் வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரண்டு அணிகளின் வீரர்கள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – விராட் கோலி, கிறிஸ் கெய்ல். மந்தீப் சிங்க், டிராவிஸ் ஹெட், கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன், ஸ்டுவர்ட் பின்னி, பவன் நெகி, ஆடம் மில்னே, ஸ்ரீநாத் அரவிந்த், யுஸ்வேந்த்ர சஹால்.
குஜராத் லயன்ஸ் – வெய்ன் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஷிவில் கௌஷிக், ஆண்ட்ரே டை, பிசில் தம்பி, தவால் குல்கர்னி.