தற்போது ஐபில் தொடர் 10 வெற்றிகரமாக வருகிறது. லீக் போட்டி 23-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த தொடரில் இதற்கு முன்பே ஒரு முறை குஜராத் அணியும் கொல்கத்தா அணியும் மோதியது. அந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அதனால், பதிலடி கொடுக்கவேண்டும் என்று குஜராத் அணி நினைத்திருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி தலைவர் சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளார்.
டாஸின் போது:
சுரேஷ் ரெய்னா – நாங்கள் பந்துவீச தேர்ந்தெடுத்துள்ளோம். டை-க்கு பதிலாக பால்க்னர், கௌஷிக்கு பதிலாக பிரவீன் குமார் உள்ளே வந்துள்ளார்.
கவுதம் கம்பிர் – நாங்களும் பந்து வீச தான் முடிவெடுத்தோம். எங்கள் அணியில் ஒரே மாற்றம் தான். க்ராந்தோம்மேக்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் உள்ளே வந்துள்ளார்.
அணிகள் விவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கவுதம் கம்பிர், ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, ,சூர்யா குமார் யாதவ், யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன், கிறிஸ் வோக்ஸ், ,சுனில் நரேன், நாதன் கோல்ட்டர்-நைல், குல்தீப் யாதவ்,.உமேஷ் யாதவ்.
குஜராத் லயன்ஸ் – வெய்ன் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் பால்க்னர், பிரவீன் குமார், பசில் தம்பி, தவால் குல்கர்னி.