தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான ஐபில் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று இருக்கிறது. இதில் 26வது லீக் போட்டியில் குஜராத் லியன்ஸுடன் மோத போகிறது கிங்ஸ் XI பஞ்சாப். அணி. இரண்டு அணியும் புள்ளி பட்டியலில் கீழே உள்ளதால், இந்த போட்டி அவர்களுக்கு முக்கிய போட்டி ஆகும். கடைசி போட்டியில் கொல்கத்தாவை கொல்கத்தாவிலேயே தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.
கிங்ஸ் XI பஞ்சாப் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக 200 ரன் அடித்தும் தோல்வியை கண்டனர். அந்த போட்டியில் தென்னாபிரிக்காவின் ஹசிம் ஆம்லா அற்புதமான சதம் அடித்தார். ஆனாலும், அவரது அணி தோல்வியை கண்டது.
இந்த போட்டி குஜராத்தில் நடப்பதால், குஜராத் லியன்ஸுக்கு சாதகமாக இருக்கும். இந்த போட்டியில் இரண்டு அணியுமே வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெறவேண்டும் என நினைக்கும்.
நேருக்கு நேர்:
இதுவரை கிங்ஸ் XI புஞ்சாபும் குஜராத் லியன்ஸும் இரண்டு போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இரண்டு அணியும் ஒவ்வொரு வெற்றியை கண்டுள்ளது.
எதிர்பார்க்கும் XI:
குஜராத் லயன்ஸ்: குஜராத் லயன்ஸ் அணி முதல் சில போட்டிகள் தோல்வி அடைந்ததற்கு காரணம், சரியான அணியை தேர்ந்தெடுக்காததே. இந்த போட்டியில் வெய்ன் ஸ்மித்துக்கு பதிலாக ஆண்ட்ரே டை களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பால்கனரை அணியில் இருப்பது, குஜராத்துக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கூடுதல் பலத்தை அளிக்கிறது.
எதிர்பார்க்கும் குஜராத் லயன்ஸ் அணி – ஆரோன் பின்ச், பிரண்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆண்ட்ரே டை, தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் பால்க்னர், பிரவீன் குமார், பசில் தம்பி, தவால் குல்கர்னி.
கிங்ஸ் XI பஞ்சாப் : கிங்ஸ் XI பஞ்சாப் அணி 200 ரன் அடித்தும் மும்பை இந்தியன்ஸுடன் தோல்வியை கண்டது. பஞ்சாபில் பந்துவீச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் போல் விளையாட வில்லை. இதுதான் பஞ்சாபின் தோல்விற்கு காரணம். பந்துவீச்சில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக வருண் ஆரோன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கும் கிங்ஸ் XI பஞ்சாப் அணி – ஹசிம் ஆம்லா, மனன் வோஹ்ரா, கிளென் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், வ்ரிதிமான் சஹா, அக்சர் பட்டேல், குர்கீரத் சிங்க், மோஹித் சர்மா, சந்தீப் சர்மா, வருண் ஆரோன்.