Royal Challengers Bangalore, Royal Challengers Bangalore Playing XI, Royal Challengers Bangalore XI, Gujarat Lions, Cricket, IPL 2017

இந்த ஐபில்-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் இரண்டாவது முறையாக மோதுகிறது. முதல் சந்திப்பில் பெங்களூரு அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 77 ரன் அடித்ததற்காக கெய்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதே போட்டியில் விராட் கோலி அற்புதமாக விளையாடினார். அவர் 50 பந்துகளில் 64 ரன் அடித்தார். ,இதனால், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 213 ரன் அடித்தது.

பெங்களுருவின் கடைசி போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், இனி வரும் போட்டிகளை வெற்றி பெற்றாதால் தான் பிலே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது. இப்பொழுது பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகள் பெற்று, புள்ளி பட்டியலில் 6வது இடத்தில உள்ளது.

இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு பதிலாக மற்றொரு இளம் வீரரான ஹர்ப்ரீட் சிங்க்கை சேர்த்துள்ளர்னர். பெங்களூரு ஸ்டேடியத்தில் கிறிஸ் கெய்ல் கலக்குவார்.

விராட் கோலியும் குஜராத் லியன்ஸுடன் தெறி பார்மில் உள்ளார். அவர் குஜராத்துடன் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு அரைசதம், இரண்டு சதம் அடித்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் இப்பொழுது பார்மில் இல்லாதது பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவு. இருந்தாலும் எதிரணி பந்துவீச்சாளர்களை சின்னாபின்னம் ஆக்கும் திறமையுடையவர்.

எதிர்பார்க்கும் பெங்களூரு அணி: கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கேதார் ஜாதவ், ஹர்ப்ரீட் சிங்க், ஸ்டுவர்ட் பின்னி, பவன் நெகி, டிமால் மில்ஸ், ஸ்ரீநாத் அரவிந்த், சாமுவேல் பத்ரீ, யுஸ்வேந்த்ர சஹால்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *