ஐபில் 10வது தொடரின் தொடக்கத்தில் புனே அணியின் மேல் நம்பிக்கை இல்லாததால், தோனியை பற்றி அவதூறாக விமர்சித்தார் கோயங்கா.
இதனால் இவர் இந்தியாவில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார். ஆனால், பல பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி புனே அணியை வெற்றி பெற செய்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. ஆனால், மும்பை அணிக்கு எதிராக ஸ்மித் 84 ரன் குவித்ததால், தோனியை விட்டுவிட்டு ஸ்மித்தை பாராட்டினார் கோயங்கா. இதனை சும்மா விடவில்லை தோனி ரசிகர்கள், ட்விட்டரில் கோயங்காவை அவமானம் செய்யும்படி டேக்-கை உபயோகித்து ட்ரெண்ட் பண்ணினர்.
புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயன்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் எம்.ஸ். தோனி ஜோடியை ஜெய் மற்றும் வீறு போல் இருக்கிறது என கூறியுள்ளார்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே சிறந்த ஜோடி ஜெய் மற்றும் வீறு தான். ஜெய் (அமிதாப் பச்சன்) மற்றும் வீறு (தர்மேந்திரா) ஆகிய இருவரும் சினிமாவில் ஜோடியாக சேர்ந்து பட்டையை கிளம்புவார்கள்.
அவர்களுடன் ஸ்மித் மற்றும் தோனியை ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் என்ன சொல்ல வரார் என்றால், ஒருவர் இல்லாமல் இன்னொருவர் ஜொலிக்க முடியாது என சொல்லுகிறார். அவர் பதிவிட ட்வீட்டை பாருங்கள்:
ஆனால் இந்த ஜோடியால் கூட மும்பைக்கு எதிரான இறுதி போட்டியில் 129 ரன்கள் கூட அடிக்க முடியாமல் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.