எனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது; மகிழ்ச்சியில் இளம் வீரர் !!
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தனது வாழ்நாள் கனவு என்று இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியால் 6 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் இஷான் கிஷான் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஷான் கிஷான் கூறியதாவது, “ஐ.பி.எல் 2018ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்ற நாளில் என்னை எதாவது ஒரு அணி எடுத்து கொள்ளும் என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் எனது சிறு வயதில் இருந்தே இந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி 6 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனது வாழ்நாள் கனவே நிறைவேறிவிட்டது போல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ;
Ishan Kishan's auction day story is simply heartwarming ❤
Surely a proud moment for his family! ?#CricketMeriJaan pic.twitter.com/hcYmLcftJy
— Mumbai Indians (@mipaltan) April 1, 2018
இந்திய கிரிக்கெட் அணியிலும் சில போட்டிகளில் தலை காட்ட துவங்கியுள்ள வளர்ந்து வரும் இளம் வீரர் இஷான் கிஷான் இதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.
வரும் 7ம் தேதி துவங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.