கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸுடன் ஒன்றாக விளையாட ஆவலுடன் காத்திருக்கும் கிறிஸ் வோக்ஸ்..! 1

கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸுடன் ஒன்றாக விளையாட ஆவலுடன் காத்திருக்கும் கிறிஸ் வோக்ஸ்..!

ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான தொடரில் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸுடன் சேர்ந்து விளையாட ஆவலடன் காத்துள்ளதாக கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை  கோடிகளை குவித்து எடுத்து கொண்டன. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் பலம் பொருந்திய அணியாக இந்த ஆண்டு களம் காண உள்ளது.

கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸுடன் ஒன்றாக விளையாட ஆவலுடன் காத்திருக்கும் கிறிஸ் வோக்ஸ்..! 2

இதில் கடந்த தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸை, இந்த முறை கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி தனது அணியில் எடுத்து கொண்டது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள கிறிஸ் வோக்ஸ், டிவில்லியர்ஸ் மற்றும் கோஹ்லியுடன் ஒன்றாக சேர்ந்து ஒரே அணியில் விளையாடுவதற்காக ஆவலுடன் காத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிறிஸ் வோக்ஸ் கூறியதாவது;

நான் ஐ.பி.எல் தொடரில் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக கொல்கத்தா அணிக்காக விளையாடிய போது முன்னாள் வீரர் பாலாஜியிடம் இருந்து பல்வேறு நுணுக்கங்களை கற்று கொண்டேன், அவரின் ஆலோசனைகள் எனக்கு பெரும்  உதவியாக இருந்தது.

கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸுடன் ஒன்றாக விளையாட ஆவலுடன் காத்திருக்கும் கிறிஸ் வோக்ஸ்..! 3
CSK during the Indian Premier League (IPL) auction held at the ITC Gardenia hotel in Bangalore on the 27th January 2018
Photo by Ron Gaunt / IPL / SPORTZPICS

 

இந்த தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் போன்ற உலக தரம் வாய்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றாக, ஒரே அணியில் விளையாடுவதை நினைத்தால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் என்னால் முடிந்த வரை சிறப்பாக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *