விசில் போடுவதற்காக மீண்டும் புனே செல்கிறது சென்னை ஆர்மி
சென்னை சூப்பா் கிங்ஸ், சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியை நேரில் காண சென்னை ரசிகா்கள் இன்று இரண்டாவது முறையாக சிறப்பு ரயிலில் புனே புறப்பட்டனா்.
2018ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்டு பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சூதாட்ட புகாாில் சிக்கி 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்த ஆண்டு மீண்டும் களம் இறங்கி உள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் களம் இறங்கியுள்ள சென்னை அணியின் ஆக்ரோஷத்தை காண அந்த அணியின் ரசிகா்கள் காத்திருந்தனா்.

இந்நிலையில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறக் கூடாது என்று அரசியல் கட்சியினா் சிலா் போராட்டம் நடத்தினா். இதனைத் தொடா்ந்து சென்னையில் நடைபெறுவதாக இருந்த போட்டிகள் அனைத்தும் புனே நகரத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால் ரசிகா்கள் சென்னை அணியின் ஆட்டத்தை நேரில் பாா்க்க முடியாமல் ஏக்கத்தில் இருந்தனா். ரசிகா்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில் சென்னையில் இருந்து புனே நகரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னை அணியின் ரசிகா்கள் மட்டும் இடம் பெற்றிருந்தனா். இந்த ரயிலை சென்னை சூப்பா் கிங்ஸ் அணி நிா்வாகம் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து ரசிகா்களை அழைத்துச் செல்கிறது.
#WhistlePoduExpress version of namma #WhistlePodu song! Loud whistles on the way to Pune for the SRH match! #Yellove #RRvCSK ?? pic.twitter.com/owGm0PkSLy
— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2018
The official super gear stall now open at Ascendas IT park, Chennai! Rush and wear the pride gear for the match day! Store open till 6 PM only. #WhistlePodu #Yellove #RRvCSK ?? pic.twitter.com/Jzc2149uHE
— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2018
Touch point Renigunta and some media attention to the #WhistlePoduArmy, which they deserve for all the #Yellove. #WhistlepoduExpress ?? pic.twitter.com/YIxCJwmprL
— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2018
For those who have missed it, here is the flagging off of #WhistlepoduExpress from Chennai Central to Pune. #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/ubYZNhSI4b
— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2018
Backing the lions always! Two match treat for #WhistlePoduExpress. #RRvCSK today while on journey and the other live at the #DenAwayFromDen. #WhistlePodu ?? pic.twitter.com/PqYSvxHwjj
— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2018
ஏற்கனவே சென்னை அணியின் ஆட்டத்தை காண இந்த ரயில் இயக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இந்த ரயில் புனே புறப்பட்டது. மேலும் இன்று இரவு சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி ரயில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.