ஹர்திக் பாண்டியா நிச்சயம் விளையாடுவார்; ரோஹித் சர்மா நம்பிக்கை !! 1
ஹர்திக் பாண்டியா நிச்சயம் விளையாடுவார்; ரோஹித் சர்மா நம்பிக்கை

சென்னை அணியுடனான போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஐ.பி.எல் தொடரின் பரம எதிர்களான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

ஹர்திக் பாண்டியா நிச்சயம் விளையாடுவார்; ரோஹித் சர்மா நம்பிக்கை !! 2

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது  மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கிய வீரரான ஹர்திக் பாண்டியா காமடைந்தார். காயமடைந்த அடுத்த சில நிமிடங்களில் ஹர்திக் பாண்டியா மீண்டும் களத்திற்கு வந்துவிட்டாலும், அடுத்த சில போட்டிகளில் ஹர்திக பாண்டியா விளையாட மாட்டார் என்று சில தகவல்கள் பரவின.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா நிச்சயம் விளையாடுவார்; ரோஹித் சர்மா நம்பிக்கை !! 3

இது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது, “முதல் போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளார். நிச்சயம் அவர் அடுத்தடுத்த போட்டிகளிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்களுக்கான அடுத்த போட்டி நடைபெற இன்னும் மூன்று தினங்கள் உள்ளதால் இதுவும் ஹர்திக் பாண்டியா குணமடையை கை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை அணியுடனான முதல் போட்டி குறித்து பேசிய ரோஹித் சர்மா, “முதல் போட்டியில் நடந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள். போட்டியின் 17வது ஓவர் வரை வெற்றியின் காற்று எங்கள் பக்கம் தான் வீசியது, ஆனால் கடைசி மூன்று ஓவர்கள் போட்டியை அப்படியே தலை கீழாக மாற்றி போட்டு எங்களிடம் இருந்து வெற்றியையும் பறித்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா நிச்சயம் விளையாடுவார்; ரோஹித் சர்மா நம்பிக்கை !! 4

கேதர் ஜாதவ் விலகல்;

இரு அணிகள் இடையேயான இதே போட்டியின் போது காயமடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *