ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்; க்ளேசன் மகிழ்ச்சி
ஐ.பி.எல் தொடரில் தனக்கு வாய்ப்பு வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தான் நன்றி கடன் பட்டுள்ளதாக தென் ஆப்ரிக்கா அணியின் இளம் வீரர் ஹென்ரிச் க்ளேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர், வரும் 7ம் தேதி துவங்க உள்ளது.

இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மட்டும் இந்த தொடர் துவங்கும் முன்பே பெரும் அடியாக அந்த அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தார்.
இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக அஜிக்னியா ரஹானேவை கேப்டனாக நியமித்த ராஜஸ்தான் அணி, அவரது இடத்தில் தென் ஆப்ரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் க்ளேசனை எடுத்து கொண்டது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹென்ரிச் க்ளேசன், தனக்கு வாய்ப்பு வழங்கியுள்ள ராஜஸ்தான் அணிக்கு கடைமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
இது குறித்து ஹென்ரிச் க்ளேசன் கூறியதாவது, “எனக்கு இப்படிப்பட்ட ஒரு அரிய வாய்ப்பை வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். இது தான் ஐ.பி.எல் தொடரில் எனக்கு கிடைக்கும் முதல் வாய்ப்பு என்பதை போல் நான் இந்தியா வர இருப்பதும் இது தான் முதல்முறை. இதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளேன். இந்த தொடரில் நிச்சயம் என்னால் முடிந்த வரை சிறப்பாக விளையாடி என்னை நீரூபிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;
ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஜெயதேவ் உனாட்கட், சஞ்சு சாம்சன், ஜோஃப்ரா ஆர்சர், கிருஷ்ணப்பா கவுதம், ஜாஸ் பட்லர், ரஹானே, டார்கி ஷார்ட், ராகுல் த்ரிப்பதி, தவால் குல்கர்னி, ஜாஹிர் கான் பக்தீன், பென் லாக்கின், ஸ்டூவர்ட் பின்னி, துஸ்மாந்தா சமீரா, அனிருட் சிங், அர்யமான் விக்ரம் பிர்லா, மிதுன், ஸ்ரேயஸ் கோபால், பிரசாந்த் சோப்ரா, ஜடின் சகினா, அன்கித் சர்மா, மஹிபால் லோமர், ஹென்ரிச் க்ளேசன்.