மீண்டும் வருகிறார் முரளி விஜய்; பஞ்சாப்பிற்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் உத்தேச அணி
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 10 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய இரவு நடைபெறும் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.
இந்நிலையில் பஞ்சாப் அணிக்கான இன்றைய போட்டியில் களமிறங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸின் உத்தேச அணியை இங்கு பார்ப்போம்.
முரளி விஜய்;
சென்னை அணி விளையாடிய கடந்த இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாத முரளி விஜய், இன்றைய போட்டியில் மீண்டும் களம் காண அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. மேலும் இவரே இன்றைய போட்டியில் சேன் வாட்சனுடன் சேர்ந்து சென்னை அணிக்கு துவக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.