டூவைன் பிராவோ;
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மாஸ் காட்டி சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த டூவைன் பிராவோ, கொல்கத்தா அணியுடனான கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கினார். ஆண்ட்ரியூ ரசல் இவரின் பந்துவீச்சை பயன்படுத்தியே கொல்கத்தா அணியை 200 ரன்கள் வரை அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இவர் பவுலிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும்.