ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – போட்டி கணிப்பு 1

தற்போது இந்தியாவில் 11வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில்,ஏப்ரல் 10ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. முதல் போட்டியில் இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றதால், இந்த போட்டி சுவாரசியமாக செல்லும்.

வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் திரில்லிங் வெற்றி பெற, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதற்கு முன்பு இரு அணிகளும் விளையாடும் போது ஆட்டம் த்ரில்லிங்காகவே இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

முதல் போட்டியின் போது கேதார் ஜாதவிற்கு காயம் ஏற்பட்டதால், அவர் இந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், சென்னை அணியில் அடுத்த போட்டிக்கு மாற்றம் இருக்கும்.

கேதார் ஜாதவிற்கு பதிலாக தமிழகத்தின் முரளி விஜய் திரும்பி அணிக்கு திரும்ப, ஷேன் வாட்சனுடன் சேர்ந்து இன்னிங்க்ஸை தொடங்கலாம். இதனால், கடைசி போட்டியில் தொடக்கவீரராக விளையாடிய அம்பதி ராயுடு, நடுவரிசையில் விளையாடுவார்.

மார்க் வுட் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் ஏமாற்றினாலும், ஒரு போட்டியை பார்த்து அவர்களை வெளியே உட்கார வைக்க மாட்டார்கள். இதனால், மீண்டும் பந்துவீச்சை அவர்கள் லீட் செய்வார்கள்.

எதிர்பார்க்கும் அணி – ஷேன் வாட்சன், முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சஹார், மார்க் வுட், இம்ரான் தாஹிர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

முதல் போட்டியில் வினய் குமார் அணியில் இடம் பிடித்தது அனைவருக்கும் ஆச்சரியம் தான். முதல் போட்டியில் அதிக ரன் வாரி கொடுத்ததால், அவருக்கு பதிலாக இளம் ரத்தம் கமலேஷ் நாகர்கோடி அணியில் இடம் பிடிப்பார்.

அதே போல், முதல் போட்டியில் ரிங்கு சிங் ஏமாற்றினாலும், அவர் அதிரடி வீரர் என்பதால் அவருக்கு கிடைக்கும். அவர் மீண்டும் சொதப்பினால், அந்த இடத்தை தட்டி செல்ல ஷுப்மன் கில் காத்திருக்கிறார்.

எதிர்பார்க்கும் அணி – சுனில் நரைன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், மிட்சல் ஜான்சன், கமலேஷ் நாகர்கோடி, பியூஸ் சாவ்லா, குல்தீப் சிங்

நேருக்கு நேர்:

இதுவரை 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது சென்னை மற்றும் கொல்கத்தா அணி. இதில் சென்னை அணி 10 வெற்றியும், கொல்கத்தா அணி 4 வெற்றியும் பெற்றுள்ளது. இந்நிலையில், இதை பார்க்கும் பொழுது சென்னை அணியின் கை ஓங்கியுள்ளது.

எங்கு:

சேப்பாக்கம் மைதானம், சென்னை

எப்போது:

ஏப்ரல் 10, 2018 – இரவு 8 மணிக்கு

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *