ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 1

தற்போது இந்தியாவில் 11வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில்,ஏப்ரல் 10ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. முதல் போட்டியில் இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றதால், இந்த போட்டி சுவாரசியமாக செல்லும். கொல்கத்தா அணிக்கு எதிராக இந்த அணி விளையாடலாம். பாருங்கள்:

ஷேன் வாட்சன்

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 2

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் முதல் போட்டியில் 16 ரன்னில் அவுட் ஆனாலும், அடுத்த போட்டியில் அவரது வாணவேடிக்கை இன்னிங்ஸ் சென்னை அணிக்கு தேவை.

முரளி விஜய்

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 3

கேதார் ஜாதவ் ஐபில் தொடரில் இருந்து விலகியதால் மீண்டும் இன்னிங்ஸை தொடங்க வருவார் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய்.

சுரேஷ் ரெய்னா

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 4

ஐபில் கிங் சுரேஷ் ரெய்னா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 ரன்னில் அவுட் ஆகி சென்னை அணியை ஆபத்தில் தவிக்கவிட்டார். இவர் நின்றுவிட்டால், சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென ஏறும்.

அம்பதி ராயுடு

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 5

முதல் போட்டியில் தொடக்கவீரராக களமிறங்கிய ராயுடு முரளி விஜயின் வருகையால் மீண்டும் நடுவரிசையில் இறங்க வாய்ப்புள்ளது.

மகேந்திர சிங் டோனி

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 6

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்னில் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றிய தோனி, மீண்டும் பார்முக்கு வந்துவிட்டால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்து விடுவார்.

டுவைன் பிராவோ

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 7

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அற்புதமாக விளையாடி சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற டுவைன் பிராவோ, மீண்டும் கொல்கத்தா அணிக்கு எதிராக இதே போல் விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

ரவீந்திர ஜடேஜா

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 8

ஆல் ரவுண்டரான ஜடேஜா சமீப காலமாக பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இவருக்கான வாய்ப்பும் சமீப காலமாக குறைந்து கொண்டே வருகிறது.  இந்த தொடரை ஜடேஜா பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் இந்திய அணியில் கூட ஜடேஜா இடம்பிடிக்கலாம்.

தீபக் சஹார்

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 9

ஷர்துல் தாகூருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த தீபக் சஹார் அற்புதமாக பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 3 ஓவர்கள் வீசிய அவர் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

ஹர்பஜன் சிங்

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 10

 

முதல் போட்டியில் 2 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார் ஹர்பஜன். சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு காத்திருக்கும்.

மார்க் வுட்

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 11

மார்க் வுட் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இம்ரான் தாஹிர்

ஐபில் 2018, போட்டி 5: சென்னை vs கொல்கத்தா – எதிர்பார்க்கும் சென்னை அணி 12

தென்னாபிரிக்கா அணியின் இம்ரான் தாஹிர் மும்பை அணிக்கு எதிராக 2 ஓவர்கள் வீசி 23 ரன் கொடுத்திருக்கிறார். ஆனால் சுழற்பந்துக்கு சாதகமான மைதானத்தில் அவரது சூழல் ஈடுபடலாம்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *