கொல்கத்தாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஹைதராபாத்
ஐதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதற்கிடையே, ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்நிலையில், இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;
ஷிகர் தவான், கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான், ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி, கர்லஸ் பிராத்வைட், புவனேஷ்வர் குமார், ரசீத் கான், சித்தார்த் கவூல், சந்தீப் சர்மா.
இந்த போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;
சுனில் நரைன், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரியூ ரசல், சுப்மன் கில், ஜாவன் ஸியர்லஸ், பியூஸ் சாவ்லா, ப்ரதீஷ் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.