ஐபில் 2018, போட்டி 6: ராஜஸ்தான் vs டெல்லி - போட்டி கணிப்பு 1

தற்போது இந்தியாவில் 11வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி ராஜஸ்தானில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இரண்டு அணிகளுமே தோல்வியை கண்டதால், முதல் வெற்றியை பெற இரண்டு அணிகளுமே போராடும்.

மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சரணடைய, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை கண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இரண்டு அணிகளுக்கு புள்ளி கணக்கை தொடங்கும் முனைப்பில் இருக்கும். இதனால், போட்டி சுவாரஸ்யமாகவே இருக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

முதல் போட்டியில் டார்சி ஷார்ட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் ஏமாற்றியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. இதனால், அடுத்த போட்டியில் டார்சி ஷார்ட் நல்ல தொடக்கம் தந்தால், அணியின் ஸ்கோர் மளமளவென ஏறும்.

அதே போல், முதல் போட்டியில் வெளியே உட்கார்ந்த ஆல்-ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி, கவுதம் அல்லது ஷ்ரேயஸ் கோபால் இடத்தை பிடித்து மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கும் அணி: அஜிங்க்யா ரஹானே, டார்சி ஷார்ட், சஞ்சு சாம்சன், ராகுல் த்ரிபதி , பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டுவர்ட் பின்னி, ஷ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனட்கட், தவால் குல்கர்னி, பென் லாப்லின்

டெல்லி டேர்டெவில்ஸ்:

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே பக்காவாக இருந்தும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியுடன் மண்ணை கவ்வியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. மேலும், அடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பினால், டேனியல் கிறிஸ்டின் வெளியே செல்ல வேண்டியது வரும்.

அதே போல் பந்துவீச்சில் மாற்றம் ஏற்பட்டால், அனுபவம் வாய்ந்த ஷபாஸ் நதீமை அணியில் சேர்க்கலாம். அடுத்த போட்டியில் கவுதம் கம்பிர் மற்றும் கோலின் முன்றோ ஆகியோர் நல்ல தொடக்கம் தந்தால், டெல்லி அணி நல்ல ஸ்கோர் அடிக்க வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கும் அணி: கவுதம் கம்பிர், கோலின் முன்றோ, ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், விஜய் ஷங்கர், கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா, ஷபாஸ் நதீம், ட்ரெண்ட் போல்ட், முகமது ஷமி

நேருக்கு நேர்:

இது வரை 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி. இதில் 10 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும், 6 போட்டிகளில் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளன.

எங்கு?

சவாய் மன்சிங் மைதானம், ஜெய்ப்பூர்

எப்போது?

ஏப்ரல் 11, 2018 – இரவு 8 மணிக்கு

போட்டி கணிப்பு:

முந்தைய ரெகார்டஸ் ராஜஸ்தான் பக்கம் இருந்தாலும், ராஜஸ்தான் அணியுடன் ஒப்பிடும் போது டெல்லி அணி பலமாகவே இருப்பதால், டெல்லி வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *