தற்போது இந்தியாவில் பிரமாண்ட டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று ஐதராபாத் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வியை பெற்றது மும்பை இந்தியன்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியை வெற்றி பெற்றது ஐதராபாத் அணி. இந்நிலையில், முதல் வெற்றி பெற மும்பை அணியும், வெற்றியை தொடர ஐதராபாத் அணியும் போராடும் என எதிர்பார்க்க படுகிறது.
எப்போது?
ஏப்ரல் 12, 2018 – இரவு 8 மணிக்கு
எங்கு?
ராஜிவ் காந்தி சர்வதேச மைதானம், ஐதராபாத்
டாஸ்:
முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச முடிவு செய்தது.
விளையாடும் அணி:
சன் ரைசர்ஸ் ஐதராபாத்:
வ்ரிதிமான் சாஹா, ஷிகர் தவான், கேன் வில்லியம்சன், தீபக் ஹூடா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன், ரஷீத் கான், பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா, எவின் லெவிஸ், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், பிரதீப் சங்வான், க்ருனால் பாண்டியா, கிரண் பொல்லார்ட், பென் கட்டிங், மயங்க் மார்கண்டே, முஷ்டபிஸுர் ரஹ்மான், ஜேஸ்ப்ரிட் பும்ரா