தற்போது நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் 20 வயதான லெக் ஸ்பின்னர் மயங்க் மார்கண்டே, தனது ஐபில் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாத அளவில் தொடங்கியுள்ளார்.
முதல் இரண்டு போட்டிகளில் அற்புதமாக பந்து வீசி 7 விக்கெட்டுகள் எடுத்த மயங்க் மார்கண்டே ஊதா நிற தொப்பியை தட்டி சென்றார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி துவண்டு போய் இருந்தாலும், மயங்க் மார்கண்டே அட்டகாசமாக விளையாடியுள்ளார்.
ஏப்ரல் 7ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் மயங்க் மார்கண்டே. அதே பார்மில் அடுத்த போட்டியில் களமிறங்கிய அவர் ஏப்ரல் 12ஆம் தேதி இரவு அன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்.
மயங்க் மார்கண்டே சிறப்பாக செயல்பட்டாலும், இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரு வெற்றியை கூட ரசிக்கவில்லை மும்பை இந்தியன்ஸ்.
மேலும், தன்னிடம் நிறைய சொல்ல வில்லை என கேப்டன் ரோகித் ஷர்மாவை புகழ்ந்தார் மயங்க் மார்கண்டே.
“இது என்னுடைய முதல் ஐபில் தொடர், எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. ரோகித் என்னிடம் நிறைய சொல்லவில்லை, தெரிந்ததை செய் என மட்டுமே என கூறினார்,” என ஐதராபாத் அணியை சீர்குலைத்த மயங்க் மார்கண்டே தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய முதல் ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடும் சந்தோசத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலமும் தெரிவித்தார்.
“இரண்டே போட்டியில் ஊதா நிற தொப்பி. இதை விட சிறப்பாக தொடங்க முடியாது,” என பதிவித்தார்.
“என்னால் இந்த வருடம் தான் ஹர்பஜன் சிங்கை பார்க்க முடிந்தது. பஞ்சாப் அணிக்காக லிஸ்ட் A போட்டிகளில் விளையாடும் போது எனக்கு உதவியுள்ளார். போட்டியின் போது எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்,” என மார்கண்டே கூறினார்.
மேலும், இந்த ஐபில் தொடர் முழுவதும் இதே போல் சிறப்பாக செயல்பட வேண்டும் என மயங்க் மார்கண்டே நம்புகிறார்.