இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..? இரு அண்களும் ஒரு பார்வை !! 1
இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..? இரு அண்களும் ஒரு பார்வை

ஐ.பி.எல் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகள் தற்போது மிகபிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் பெரும் வரவேற்பிற்கு மத்தியில்  வெற்றிகரமாக நடைபெற்று இந்த தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் – மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

Cricket, Mayank Markhande, IPL, Mumbai Indians

இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்த இரு அணிகளும் இரண்டு போட்டியிலும் தோல்வியையே சந்தித்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள்  உள்ள அணி எது, இரு அணிகளின் பலம் பலவீனம் என்ன..? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் அணி;

மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு போட்டியிலும் கடைசி ஓவர் வரை போராடி நூழிலையில் வெற்றியை தவறவிட்ட ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங் ஆர்டர் முழு பலம் கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்கும் பட்சத்தில் மும்பை அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கூடுதல் பலம் கிடைக்கும்.

இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..? இரு அண்களும் ஒரு பார்வை !! 2

இதே போல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய பேட் கம்மின்ஸிற்கு பதிலாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே மும்பை அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, இன்றைய போட்டியில் அவர் களம் காணவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. இது தவிர மும்பை  இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான மும்பை வான்கடே மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது மும்பை அணிக்கு கூடுதல் பலமே.

இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..? இரு அண்களும் ஒரு பார்வை !! 3

 

டெல்லி டேர்டெவில்ஸ்;

இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் டெல்லி அணி 180+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..? இரு அண்களும் ஒரு பார்வை !! 4

இந்த தொடரில் கவுதம் காம்பீர் தலைமையில் பயணித்து வரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. காம்பீர், ரிஷப் பண்ட், கிறிஸ் மொரிஸ் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கும் போதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஆட்டத்தாலேயே டெல்லி அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை இன்றைய போட்டி டெல்லி அணி சரி செய்து கொள்ளும் பட்சத்தில் மும்பை அணிக்கு இன்று கடும் நெருக்கடி ஏற்படும்.

இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..? இரு அண்களும் ஒரு பார்வை !! 5

எதிர்பார்க்கப்படும் முடிவு;

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. அதே போல் இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை வைத்து பார்க்கையில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *