பேட் கம்மின்ஸ் இடத்திற்காக போட்டி போடும் நான்கு வீரர்கள்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் துவங்கி சில தினங்களே நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு அணியில் இருந்தும் காயம் காரணமாக வீரர்கள் வெளியேறி வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில் சென்னை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பேட் கம்மின்ஸ் நேற்று விலகினார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ள நிலையில், மும்பை அணியில் கம்மின்ஸிற்கு பதிலாக இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ள நான்கு வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.
லசீத் மலிங்கா;
ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான ஏலத்தில் விலை போகாத இலங்கை அணியின் முன்னாள் வீரர் மலிங்கா, தற்போது மும்பை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக உள்ளார். இவரை கம்மின்ஸிற்கு பதிலாக அணியில் இணைக்க மும்பை நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
ஹெஸ்ரிக் வில்லியம்ஸ்;
விண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீர்ரான ஹென்ரிச் வில்லியம்ஸும் ஆலோசனை பட்டியலில் உள்ளதாக தெரிகிறது. இவர் மும்பை அணியில் இடம்பெறும் பட்சத்தில் மும்பை அணிக்கு நிச்சயம் கூடுதல் பலமே.
தைமல் மில்ஸ்;
கடந்த ஐ.பி.எல் தொடரில் 12.5 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூர் அணியால் விலை கொடுத்து வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர் தைமல் மில்ஸை இந்த முறை எந்த அணியும் விலை கொடுத்து வாங்கவில்லை. ஆனால் தற்போது கம்மின்ஸிற்கு பதிலாக இவரை கூட மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணியில் சேர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
திஷாரா பெரேரா;
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனும் ஆல் ரவுண்டருமான திஷாரா பெரேராவும் இந்த தொடரில் விலை போகவில்லை. ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தனது அணியில் இணைத்து கொள்ளும் பட்சத்தில் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலமே.