பெங்களூர் vs டெல்லி; டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது கோஹ்லி படை !! 1
பெங்களூர் vs டெல்லி; டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது கோஹ்லி படை

ஐ.பி.எல் டி.20 தொடரின் பெங்களூர் – டெல்லி இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கவுதம் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.

பெங்களூர் vs டெல்லி; டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது கோஹ்லி படை !! 2

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் ஹர்சல் அறிமுகம வீரராக களமிறங்க உள்ளார்.

அதே போல் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியிலும் சர்பராஸ் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மனன் வோஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டிக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணி;

கவுதம் காம்பீர், ஜேசன் ராய், ஸ்ரேயஸ்  ஐயர், ரிஷப் பண்ட், கிளன் மேக்ஸ்வெல், ராகுல் திவேதியா, விஜய் சங்கர், கிறிஸ் மோரிஸ், சபாஷ் நதீம், ஹர்சல் பட்டேல், டிரண்ட் பவுல்ட்.

இந்த போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி;

டி.காக், மனன் வோஹ்ரா, விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், மந்தீப் சிங், கோரி ஆண்டர்ஸன், வாசிங்டன் சுந்தர், கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யுவசேந்திர சாஹல்.

Leave a comment

Your email address will not be published.