இமாலய இலக்கை ஈசியாக எட்டிய ஹைதராபாத்; கொண்டாடும் ரசிகர்கள் !! 1
Shikhar Dhawan of the Sunrisers Hyderabad bats during match forty two of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Delhi Daredevils and the Sunrisers Hyderabad held at the Feroz Shah Kotla Ground, Delhi on the 10th May 2018. Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
இமாலய இலக்கை ஈசியாக எட்டிய ஹைதராபாத்; கொண்டாடும் ரசிகர்கள்

ஐ.பி.எல் டி.20 தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.

டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இமாலய இலக்கை ஈசியாக எட்டிய ஹைதராபாத்; கொண்டாடும் ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு அந்த அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் 63 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 187 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், இதனையடுத்து கூட்டணி சேர்ந்த ஷிகர் தவான் – கேன் வில்லியம்சன் ஜோடி இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் டெல்லியின் பந்துவீச்சை சிதறடித்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே 191 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

இமாலய இலக்கை ஈசியாக எட்டிய ஹைதராபாத்; கொண்டாடும் ரசிகர்கள் !! 3
Shikhar Dhawan of the Sunrisers Hyderabad bats during match forty two of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Delhi Daredevils and the Sunrisers Hyderabad held at the Feroz Shah Kotla Ground, Delhi on the 10th May 2018.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI

ஷிகர் தவான் 92 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 83 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து ஹைதராபாத் அணியின் இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/The_Medhavi/status/994642161353179139

https://twitter.com/KethavathHRath1/status/994642117384376320

https://twitter.com/a_malignant/status/994641892456517633

https://twitter.com/Rajat1201/status/994641872092987392

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *