கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் !! 1
கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் 2008 முதல் உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர்ந்து நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் !! 2

மும்பையில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய சென்னை அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து இன்று நடந்த, எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, திருப்பதி (20) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ரகானே, சாம்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை பிரிக்க கொல்கத்தா பவுலர்கள் எடுத்த எல்லா முயற்சியும் வீணானது.

கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் !! 3

ஒரு வழியாக ரகானே (46) குல்தீப் சுழலில் சிக்கினார். தொடர்ந்து சாம்சனை (50) சாவ்லா அவுட்டாக்க, போட்டி கொல்கத்தா வசம் திரும்பியது. அடுத்து வந்த கிளாசன், கவுதம் அதிரடியாக ரன்கள் சேர்க்க தவற, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டும் எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, நாளை மறுநாள் கொல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும்.

கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் !! 4

இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இந்த வெற்றியை கொல்கத்தா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதே போல பலரும் கொல்கத்தா அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் சில;

https://twitter.com/saransh2703/status/999334340818419713

https://twitter.com/SirJadejaaaa/status/999333007763890176

https://twitter.com/TiimesHow/status/999335786519527424

https://twitter.com/SirJadejaaaa/status/999334149872857088

https://twitter.com/TiimesHow/status/999339235462209536

https://twitter.com/sagarcasm/status/999333163959648256

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *