பெங்களூரை அடித்து விரட்டிய ராஜஸ்தான்; கொண்டாடும் ரசிகர்கள்
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்க வைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய முதல் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதியும், ஜோல்டா ஆர்ச்சரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய கேப்டன் ரகானே 33 ரன்னிலும், சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். கிளாசன் 32 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 14 ரன்னிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் திரிபாதி இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடினார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. திரிபாதி 58 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 80 ரன்களுடன் களத்தில் நின்றார். பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், பர்திவ் படேலும் இறங்கினர். ஆனால், கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தது அந்த அணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ் நிதானமாக விளையாடினார். பர்திவ் படேல் 33 ரன்களில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். அவர் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.
இவர்கள் இருவரை தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் பெங்களூர் அணி இறுதியில், 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
ராஜஸ்தான் அணி சார்பில் ஷ்ரேயஸ் கோபால் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றினார். பென் லாப்லின், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
இந்த போட்டி குறித்து ட்விட்டர் வாசிகளின் கருத்து;
RCB fans watching this match right now…. #RRvsRCB pic.twitter.com/NIGZjjULh1
— Rashi Kakkar (@rashi_kakkar) May 19, 2018
RCB should thank @ABdeVilliers17 and @y_umesh for carrying them through. Hopefully, time will come when they will be playing as a team than just relying on few reputed individuals to win them games.
— Nikhil ? (@CricCrazyNIKS) May 19, 2018
I guess next season too #RCB won't pick Karnataka boys and they will cause damage by playing for some other side.
— Bharath Ramaraj (@Fancricket12) May 19, 2018
Realize RCB's core has only four people – VK, AB, Chahal, Umesh. Can't expect them to do everything but at the same time, not easy for guys who are swapped for fun to keep coming in to do good.
— Nikhil ? (@CricCrazyNIKS) May 19, 2018
RR: We are missing Buttler, Stokes and half of our side is not in form.
RCB be like: We got this, chill bro. pic.twitter.com/PO5RhOH7YT
— Nikhil ? (@CricCrazyNIKS) May 19, 2018
Gopal's spin bowling has stunned RCB dug out. Long faces everywhere. Only de Villiers stands between Rajasthan and victory
— Cricketwallah (@cricketwallah) May 19, 2018
Leg spinners are fascinating, yet so tough to play, unlike the old days. Shreyas Gopal is carrying the tradition. #RRvRCB
— ?????? ????? (@GautamSodhi1) May 19, 2018
https://twitter.com/rameshsrivats/status/997818844193394689
https://twitter.com/strangerr_18/status/997833125202771968