ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம் !! 1
ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

இந்த தொடரின் மூலம் ஒவ்வொரு அணியின் கேப்டன்களுக்கும் கிடைக்க உள்ள பணத்தை இங்கு பார்ப்போம்.

விராட் கோஹ்லி;

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனும், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனுமான விராட் கோஹ்லி, இந்த தொடர் மூலம் கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் சம்பாதிக்க உள்ளார். இவரே இந்த தொடரில் அதிக பணம் சம்பாதிக்க உள்ள வீரருமாவார்.

ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம் !! 2

தோனி;

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனியை, இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 கோடி ரூபாய் கொடுத்து தனது அணியில் தக்க வைத்து கொண்டது. இதன் மூலம் இந்த பட்டியலில் தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம் !! 3

ரோஹித் சர்மா;

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவை இந்த முறை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியே 15 கோடி ரூபாய் கொடுத்து தனது அணியில் தக்க வைத்து கொண்டது.

ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம் !! 4

ரவி அஸ்வின்;

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை, இந்த தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடும் போட்டிகளுக்கு பின்பு சென்னை அணியிடம் இருந்து பறித்து கொண்டது, அது மட்டுமல்லாமல் இவரையே தனது அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. இவருக்கு பஞ்சாப் அணி கொடுத்துள்ள விலை 7.6 கோடியாகும்.

ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம் !! 5

தினேஷ் கார்த்திக்;

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் முதன் முறையாக இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கொடுத்துள்ள தொகை 7.4 கோடியாகும்.

ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம் !! 6

அஜிக்னியா ரஹானே;

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் இந்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் சீனியர் வீரரான அஜிக்னியா ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொடுத்துள்ள விலை நான்கு கோடியாகும்.

ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம் !! 7

கேன் வில்லியம்சன்;

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் காரணமாக டேவிட் வார்னரும் இந்த தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளதால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஹைதரபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஹைதரபாத் அணி கொடுத்துள்ள விலை மூன்று கோடியாகும்.

ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம் !! 8

கவுதம் காம்பீர்;

கடந்த தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் சீனியர் வீரர் கவுதம் காம்பீர் இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இணைந்துள்ளார். மேலும் அவரே டெல்லி அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு டெல்லி அணி கொடுத்துள்ள விலை 2.8 கோடி ரூபாயாகும்.

ஐ.பி.எல் தொடரில் கோடிகளை குவிக்க காத்துள்ள கேப்டன்கள் பட்டியல்.. கோஹ்லி  முதலிடம் !! 9

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *