காயத்தில் இருந்து நூழிலையில் தப்பிய ஜஸ்ப்ரிட் பும்ராஹ்
வலைபயிற்சியின் போது மும்பை வீரரான ஜஸ்ப்ரிட் பும்ராஹ் கண்ணில் காயம் ஏற்படுவதில் இருந்து நூழிலையில் தப்பியுள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல் தொடர் முடிந்த அடுத்த இரண்டு வாரங்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது ஒவ்வொரு வீரர்களும் காயம் ஏற்படாதவாறு கவனமாக விளையாடி வருகின்றனர், அந்த கவலை ஒவ்வொரு நாட்டு அணிகளின் கேப்டன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மும்பை வீரரான ஜஸ்ப்ரிட் பும்ராஹ்விற்கு இந்த தொடரில் காயம் ஏற்பட்டு விட கூடாது என்று ஒவ்வொரு போட்டியிலும் கடவுளை வேண்டாத குறையாக ஒரு விதமான பயத்துடனே போட்டியை பார்த்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியிலேயே காயமடைந்த பும்ராஹ் அடுத்த சில தினங்களில் குணமடைந்து வந்த நிலையில், தற்பொழுது மீண்டும் ஒருமுறை காயத்தில் இருந்து பும்ராஹ் தப்பி வந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தனது கண்ணில் பட வேண்டிய பந்தில் இருந்து பும்ராஹ் நூழிலையில் தப்பியுள்ளார். இதனை மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் நிர்வாகமே அறிவித்துள்ளது.

15ம் தேதி வெளியாகும் உலகக்கோப்பைக்கான இந்திய அணி;
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி 15ம் தேதி அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வரும் 15ம் தேதி உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் உலக கோப்பை அணி அறிவிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏப்ரல் 20ம் தேதிக்குள் உலக கோப்பை அணி அறிவிக்கப்படும் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்த நிலையில், 15ம் தேதி அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.